September 27, 2022

எல்ஐசியில் 2.17 கோடி புதிய பாலிசிகள் சேர்ப்பு

சென்னை, செப்.6

எல்ஐசி நிறுவனம் 67வது ஆண்டில் அடியயடுத்து வைத்துள்ளது. இந்நிலையில், அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: எல்ஐசி தற்போது ரூ.42 லட்சத்து 30 ஆயிரத்து 616 கோடி சொத்துமதிப்பை கொண்டுள்ளது. 2021-2022-ம் ஆண்டில் 2.17 கோடி புதிய பாலிசிகளை பெற்று முதல் பிரீமிய வருவாயாக ரூ.1.98 லட்சம் கோடிகளை ஈட்டி உள்ளது.

இதன்மூலம் 7.92 சதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நடப்பு ஆண்டிலும் எல்ஐசி முதல் பிரீமிய வருவாய் அடிப்படையில் 64.96 சதம் சந்தை பங்களிப்பை பெற்றுள்ளது. 2021-2022-ம் ஆண்டில் எல்ஐசி 267.23 லட்சம் உரிமங்களுக்காக ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்து 568 கோடிகளை அளித்துள்ளது.

31.3.2022 அன்றைய நிலவரப்படி எல்.ஐ.சி.யில் தனி நபர் வணிகத்தின் கீழ் பல்வேறு விதமான மக்களின் தேவைகளுக்காக 33 விதமான திட்டங்கள் விற்பனைக்கு உள்ளன. பீமா ரத்னா, தன் சன்சய் என 2 புதிய திட்டங்களை எல்.ஐ.சி. அறிமுகப்படுத்தி உள்ளது. பாலிசிதாரர்கள் தங்களது பிரீமியத்தை ஆன்லைனிலும் செலுத்தலாம். பென்சன் பாலிசிதாரர்களுக்கான டிஜிட்டல் இருப்பு சான்றிதழை சமர்ப்பிக்க செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படும் ‘ஜீவன் சாக்?­யா’ என்ற செல்போன் செயலியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், எல்ஐசியின் பொன்விழா பவுண்டேசன் என்ஜிஓக்கள் மூலமாக 646 திட்டங்களுக்கு உதவி செய்துள்ளது. வாடிக்கையாளர் சேவை, உரிமத்தீர்வு, தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் வணிகம் போன்றவற்றின் அடிப்படையில் பல விருதுகளை எல்ஐசி பெற்றுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love