October 4, 2022

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்க திட்டம் ரூ.1500 கோடி முதலீடு செய்கிறது எஸ்ஏஆர் குரூப்

பெங்களூரு, செப்.3

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான வரவேற்பும் தேவையும், அதிகமாக இருக்கும் வேளையில், பல புதிய நிறுவனங்கள் இத்துறைக்குள் நுழைந்து வருகிறது.

இதன் வரிசையில் லிவ்பூர் மற்றும் லிவ்கார்ட் போன்ற வாட்டர் பியூரிபையர் பிராண்டுகளுக்குச் சொந்தக்காரர் ஆன எஸ்ஏஆர் குழுமம் சுமார் 1400-1500 கோடி முதலீட்டு உடன், அதன் லெக்ட்ரிக்ஸ் பிராண்ட் கீழ் இப்போது மின்சார இரு சக்கர வாகனச் சந்தையில் நுழைகிறது.

லெக்ட்ரிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே டெலிவரி பிரிவுக்கு எலகட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது அதன் முதல் ஸ்கூட்டரை நுகர்வோருக்கு அதாவது மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த குழுமத்தின் நிறுவனர் ராகேஷ் மல்ஹோத்ரா இது குறித்து தெரிவிக்கையில், இந்த மாடல்களை உருவாக்குவதற்கும் ஹரியானாவில் உள்ள மனேசரில் ஒரு உற்பத்தி தளத்தை அமைப்பதற்கும் இதுவரை சுமார் 300 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது. மானேசர் தொழிற்சாலை மூலம் தற்போது ஆண்டுக்கு 150,000 யூனிட்கள் வரை உற்பத்தி செய்ய முடியும் என ராகேஷ் மல்ஹோத்ரா தெரிவித்தார். கடந்த வாரம், லெக்ட்ரிக்ஸ் தனது முதல் ஷோரூமை திறந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் மக்களுக்கான வாகனங்களை விற்பனை செய்ய இந்தியாவில் சுமார் 150-160 விற்பனையகங்களை அமைக்கத் திட்டமிட்டு உள்ளதாக ராகேஷ் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

150 விற்பனையகங்களை உருவாகுவதற்குள் ஒரு மாதத்திற்கு 5,000 வாகனங்களை விற்பனை செய்யும் அளவிற்கு வர்த்தகத்தை விரிவாக்கச் செய்யத் திட்டமிட்டு வருகிறது லெக்ட்ரிக்ஸ் நிறுவனம்.

Spread the love