December 9, 2022

எரிபொருள் விற்பனை 26 சதம் அதிகரிப்பு

புது தில்லி, நவ.2

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கால விற்பனை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயில் மாற்றமின்மை போன்ற காரணங்களால் கடந்த 7 மாதத்திற்கு பின்னர் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 40 காசு வரை குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து மேலும் செய்தியாவது: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது.

அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இந்தியாவில் விலை குறைப்பு செய்யப்படாமல் இருந்தது. கடந்த சில மாதமாக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 95 டாலருக்கும் குறைவாகவே உள்ளது. ரஷ்யா – உக்ரைன் போரால், கடந்த மார்ச் மாதத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 139 டாலர் வரை எகிறியது.

இந்தியாவை பொருத்தமட்டில், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் என்பதால் அக்டோபர் முதல் பாதியில் இருந்தே பெட்ரோல், டீசல் விற்பனை அதிகரித்துள்ளது. அந்த வகையில் வழக்கத்தைவிட இந்தாண்டு 22 முதல் 26 சதவீதம் வரை விற்பனை உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அக்டோபர் 1 முதல் 15 வரை, பெட்ரோல் விற்பனை 22.7 சதம் அதிகரித்து 1.28 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில் கடந்தாண்டு ஒப்பிடும் போது 1.05 மில்லியன் டன்னாக இருந்தது. கடந்த ஏப்ரல் 7ம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் வரை குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்புக்கு பின்னர் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 7 மாதங்களாக மாற்றமின்றி நீடித்தது.

Spread the love