புது தில்லி, டிச.2
இந்தியாவின் மிகப்பெரிய ஆயில் மார்கெட்டிங் கம்பெனியான இந்தியன் ஆயில் கார்ப்ரேன் மாற்று எரிசக்திக்கான வர்த்தகத்திற்காகத் தனியாக ஒரு நிறுவனத்தை உருவாக்கத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்ரேன் நிறுவனம் ஏற்கனவே பயோபியூயல், பயோகேஸ், கிரீன் ஹைட்ரஜென், எலக்ட்ரிக் மொபிலிட்டி, எலக்ட்ரிக் பேட்டரி போன்ற பலவற்றில் இறங்கியும் விரிவாக்க பணிகளையும் செய்து வருகிறது. இந்த நிலையில் தனி நிறுவனத்தை உருவாக்குவதன் மூலம் எளிதாக வர்த்தகத்தையும் உற்பத்தியையும் நிர்வாகம் செய்ய முடியும்.
இந்தியன் ஆயில் கார்ப் தற்போது கிரீன் ஹைட்ரஜென் தயாரிப்பில் இறங்கியுள்ளது, தற்போது 2027-28க்குள் மொத்த ஹைட்ரஜென் உற்பத்தியில் 5 சதம் கிரீன் ஹைட்ரஜென் ஆகவும், 2029-30ல் 10 சதம் ஹைட்ரஜென் ஆக இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப் இந்தப் புதிய நிறுவனத்தை அடுத்த ஆண்டு உருவாக்க உள்ளதாகவும், இதற்கான விவாதம் மற்றும் முடிவுகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ஆயில் விவசாயக் கழிவுகளில் இருந்து 2ஜி எத்தனால், ஆட்டோமொபைல் துறைக்காகப் பியூயல் செல் டெக்னாலஜி, சோலார் பவர் மூலம் பயோடீசல் தயாரிப்பு, எனர்ஜி ஸ்டோரேஜ் டிவைஸ் ஆகியவற்றைத் தயாரிக்கும் முயற்சியில் உள்ளது.