December 9, 2022

எம்சிஎல்ஆர் வகை கடனுக்கான வட்டி விகிதத்தை 0.15 சதம் வரை உயர்த்தியது பரோடா வங்கி

மும்பை, நவ.11

மத்திய அரசுக்குச் சொந்தமான பரோடா வங்கி (பிஓபி) தனது எம்சிஎல்ஆர் வகை கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.15 சதம் வரை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து பரோடா வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எம்சிஎல்ஆர் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள கடன்களுக்கான வட்டி விகிதங்கள் 0.15 சதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஓராண்டு பருவகாலம் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதம் 0.10 சதம் உயர்த்தப்பட்டு 8.05 சதமாகிறது.

அதேபோல், ஒரு நாள் கடன்களுக்கான வட்டி விகிதமும் 7.10 சதத்திலிருந்து 7.25 சதம் ஆகிறது.

ஒன்று, மூன்று, ஆறு மாதங்களுக்கான கடன் வட்டி விகிதங்கள், முறையே 7.70 சதம், 7.75 சதம், 7.90 சதம் என உயர்த்தப்படுகின்றன. நவ.12 முதல் இந்த வட்டி மாற்றம் அமலுக்கு வருகிறது என்று அந்த பரோடா வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love