November 29, 2022

எம்சிஎல்ஆர் கடன்களுக்கான வட்டி விகிதம் இந்தியன் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி உயர்த்தியது

மும்பை, நவ.14

தங்களது எம்சிஎல்ஆர் கடன்களுக்கான வட்டி விகிதங்களை இந்தியன் வங்கியும், ஐசிஐசிஐ வங்கியும் உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி, எம்சிஎல்ஆர் அடிப்படையில் தாங்கள் வழங்கியுள்ள கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.35 சதம் வரை அதிகரித்துள்ளது. அதன்படி, அந்த வங்கியின் குறைந்தபட்ச பருவகாலக் கடன்களுக்கான வட்டி விகிதம் 7.40 சதமாக அதிகரித்துள்ளது. அதேபோல், ஒராண்டுக்கான எம்சிஎல்ஆர் கடன் வட்டி விகிதம் 8.10 சதமாக உயர்த்தப்படுகிறது. இந்த மாதம் 3ம் தேதியிலிருந்து இந்த மாற்றங்கள் அமலுக்கு வந்தன என்று இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், தனியாருக்குச் சொந்தமான ஐசிஐசிஐ வங்கியும் தனது எம்சில்ஆர் வகைக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை 0.20 சதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அந்த வங்கியின் ஓராண்டுக்கான கடன் வட்டி 8.30 சதமாகவும், 6 மாதங்களுக்கான வட்டி விகிதம் 8.25 சதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 1ம் தேதி முதல் புதிய வட்டி விகிதங்கள் அமலுக்கு வந்துள்ளது என்று ஐசிஐசி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love