November 29, 2022

என்டிடிவி பங்குகளை அதானிக்கு வாங்க செபி அனுமதி வழங்கியது

புது தில்லி, நவ.16

என்டிடிவி நிறுவனத்தின் 26 சத பங்குகளை, அதானி குழுமம், சந்தையில் வாங்கிக் கொள்ள செபி அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது குறித்து அதானி குழுமம், ஏற்கனவே என்டிடிவியின் 29.18 சத பங்குகளை, மறைமுக வழியில் வாங்கிய நிலையில், தற்போது, சந்தையின் வாயிலாக, கூடுதலாக 26 சத பங்குகளை வாங்கவுள்ளது.

இதையடுத்து, இம்மாதம் 22 முதல், டிச.5ம் தேதி வரையிலான காலத்தில், சந்தையில் 26 சத பங்குகளை வாங்க இருப்பதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், அதானி குழுமத்தின் இந்த முயற்சிக்கு தற்போது செபி அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளது.

மேலும், சந்தை வாயிலாக வாங்கும் இந்த ஓப்பன் ஆபர் நடவடிக்கையில், 1.67 கோடி என்டிடிவி பங்குகளை, அதானி குழுமம் வாங்கவுள்ளது. இந்த பரிவர்த்தனையில், ஒரு பங்கின் விலை ரூ.294 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என, சந்தையில் பங்குகளை வாங்கும் பணியை நிர்வகிக்க நியமிக்கப்பட்டு உள்ள ‘ஜெ.எம்., பைனான்ஷியல்’ தெரிவித்துள்ளது. இதற்கு முன், அக்டோபர் 17 முதல், நவம்பர் 1 வரையிலான காலகட்டத்தில், இந்த பங்குகளை சந்தையில் வாங்க இருப்பதாக, அதானி குழுமம் தெரிவித்திருந்தது. ஆனால், சில நடைமுறை சிக்கல்களால், பங்குகளை வாங்கும் முயற்சி தள்ளிப்போனது. தற்போது மீண்டும் களமிறங்கிய நிலையில், செபியும் அனுமதி வழங்கி உள்ளது. இம்முயற்சி வெற்றி பெறும் நிலையில், என்டிடிவியின் 55 சத பங்குகள், அதானி குழுமத்தின் கைக்கு வந்துவிடும்.

Spread the love