September 27, 2022

என்எஸ்சி நிப்டி 50 பட்டியலில் நுழைகிறது அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம்

புது தில்லி, செப்.3

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 50 பட்டியலில் அதானி என்டர்பிரைசஸ்’ நிறுவனம் நுழைவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: அதானி குழுமத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு நிறுவனமாக, அதானி என்டர்பிரைசஸ் உள்ளது. மிகச் சிறப்பான வளர்ச்சியை பெற்றுவரும் இந்நிறுவனம், அடுத்த கட்டமாக, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 50 பட்டியலில், இம்மாதம் 30ம் தேதி முதல் இணைகிறது.

அதானி என்டர்பிரைசஸ் நுழைவதை அடுத்து, ஸ்ரீ சிமென்ட் இப்பட்டியலில் இருந்து வெளியேறுகிறது. ஸ்ரீ சிமென்ட், நாட்டின் முன்னணி சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். தேசிய பங்குச் சந்தையின், பங்குகளுக்கான குறியீட்டு பராமரிப்பு துணைக் குழு, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வுகளை மேற்கொண்டு, சில நிறுவனங்களை குறியீட்டு பட்டியலில் சேர்த்து, சிலவற்றை நீக்கி, பட்டியலை பராமரிக்கும். அந்த வகையில், இந்த துணைக் குழு, அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தை சேர்க்கவும், ஸ்ரீ சிமென்ட் நிறுவனத்தை வெளியேற்றவும் முடிவு செய்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த மாற்றம், செப்டம்பர் 30 முதல் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love