February 3, 2023

எண்ணெய் நிறுவனங்களுக்கான
சந்தை ஆதாய வரி பாதியாகக் குறைப்பு

புது தில்லி, டிச.2

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கான சந்தை ஆதாய வரியை மத்திய அரசு பாதியாகக் குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: ரஷியா மீதான உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாக, அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெயைக் குறைந்த விலைக்குப் பெற்று, சுத்திகரிப்பு செய்து பெட்ரோல், டீசலாக ஐரோப்பிய நாடுகளுக்குத் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்து வந்தன. அதனால், அந்நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டின.

சந்தையின் ஆதாய சூழலால் நிறுவனங்கள் ஈட்டிய பெரும் லாபத்துக்கு ஜூலை 1ம் தேதி முதல் மத்திய அரசு சிறப்பு வரி விதித்து வருகிறது. சந்தை ஆதாய வரியானது இரு வாரங்களுக்கு ஒருமுறை சர்வதேச சந்தை சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கூட்டம் தில்லியில் நடைபெற்றது. அதில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான சந்தை ஆதாய வரியானது டன்னுக்கு ரூ.10,200 என்ற அளவில் இருந்து ரூ.4,900-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு ரூ.10.5-இல் இருந்து ரூ.7-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதில் லிட்டருக்கு ரூ.1.5 ஆனது சாலை கட்டமைப்பு மேம்பாட்டுக்கான செஸ் வரியாகும். விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ.5-ஆகவே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றியமைக்கப்பட்ட வரிகள் டிசம்பர் 2ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Spread the love