February 3, 2023

எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ்க்கு
10 சதம் தள்ளுபடி: ப்ளிப்கார்ட்

புது தில்லி, ஜன.7

எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் மாடலுக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் மாடல் அதன் அறிமுக விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஃபிளாக்சிப் கேமிங் கன்சோல் தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில் 10 சத தள்ளுபடி பெற்று இருக்கிறது. அண்மையில் இதன் விலை ரூ.55 ஆயிரத்து 990 என உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த கன்சோலின் விலை ரூ. 49 ஆயிரத்து 990 என மாறி இருக்கிறது. ஜனவரி 8 ஆம் தேதி வரை இந்த சலுகை வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் ஜனவரி 5 ஆம் தேதி துவங்கிய பிக் பச்சட் தமால் சேல் ஜனவரி 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விற்பனையின் அங்கமாக எக்ஸ்பாக்ஸ் மாடலுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தள்ளுபடி தவிர, பேங்க் ஆஃப் பரோடா, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் மற்றும் எஸ் வங்கி என தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதலாக 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவனம் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் விலையை உயர்த்தியது. இது நான்கு மாதங்களில் அறிவிக்கப்பட்ட இரண்டாவது விலை உயர்வு ஆகும். இம்மாத துவக்கத்தில் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் மாடலுக்கும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டது. விரைவில் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் விலை ரூ. 39 ஆயிரத்து 990 என மாற இருக்கிறது.

இது அதன் முந்தைய ரூ. 37 ஆயிரத்து 990 விலையை விட 5 சதம் அதிகம் ஆகும். தற்போது எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் மாடல் ப்ளிப்கார்ட் பிக் பச்சட் தமால் சேல் விற்பனையில் ரூ. 32 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது டிஜிட்டல் வெர்­ன் மற்றும் 512 ஜிபி எஸ்எஸ்டி வேரியண்டிற்கான விலை ஆகும்.

Spread the love