December 9, 2022

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஏற்பு

நாமக்கல், அக்.31

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டுஇ ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி. சிங்.இ இ.ஆ.ப அவர்கள் தலைமையில் இன்று (31.10.2022) அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியான “நமது நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கும் ஊழல் முக்கிய தடைகளில் ஒன்றாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இவைகள் அனைத்தும் ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நான் நம்புகிறேன்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை, கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன். எனவே, நான் அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களையும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும்,பொதுமக்களின் நலனுக்காகப் பணியாற்றுவேன் என்றும்இ தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாகச் செயல்படுவேன் என்றும், ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்குத் தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வாசிக்க அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

Spread the love