December 9, 2022

உள்நாட்டுத் தேவை அதிகரிப்பு எதிரொலி வாகன உதிர்பாக உற்பத்தி நிறுவனங்கள் 10 சதம் வரை வளர்ச்சியடையும்: இக்ரா

புது தில்லி, நவ.15

உள்நாட்டுத் தேவை அதிகரிப்பதன் காரணமாக இந்திய வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டில் 8 முதல் 10 சதம் வரை வருவாய் வளர்ச்சி காணும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான இக்ரா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், வாகன உதிரி பாக உற்பத்தித் துறை முந்தைய ஆண்டின் அதே மாதங்களோடு ஒப்பிடுகையில் 29 சத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந் நிலையில் 49 வாகன பாக நிறுவனங்களின் ஒட்டுமொத்த வருவாய் நடப்பு நிதியாண்டில் ரூ. 3,00,000 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில் ஓஇஎம் உதிரி பாகங்களுக்கான தேவை உள்நாட்டுச் சந்தையில் அமோகமாக இருக்கும். மேலும், கார்கள் மற்றும் வர்த்தக வாகன உதிரிபாகங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரிக்கும். பொதுப் போக்குவரத்துக்கும், தனி நபர் போக்குவரத்துக்குமான தேவை தொடர்ந்து ஆரோக்கிய நிலையிலேயே இருக்கும் என தெரிவித்துள்ளது. கொரோனா நெருக்கடி காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி-கல்லூரிகள், அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் வாகனப் போக்குவரத்துக்கான தேவை பெருகி வருகிறது.

இதன் காரணமாக, வாகன உதிரிபாகங்களின் விற்பனை அதிகரிக்கும். இதுபோன்ற காரணங்களால் அந்த பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் வருவாய் உயரும். அதுமட்டுமின்றி, மின்சார வாகனங்களை வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இது, வாகன உதிரிபாக விற்பனையாளர்களுக்கு நடுத்தர மற்றும் நீண்டகாலப் போக்கில் சாதகமான சூழலை ஏற்படுத்தும். எனினும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால் ஏற்றுமதியை பெரும்பாலும் நம்பியிருக்கும் வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்படும்.

அதே நேரம், பொருள் விலை குறைப்பு, விநியோகக் கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகளைக் களைவது போன்ற நடவடிக்கைகளால் நடப்பு நிதியாண்டில் வாகன உதிரி பாக உற்பத்தியாளர்களின் செயல்பாட்டு லாபம் 0.50 முதல் 0.75 சதம் வரை அதிகரிக்கும். கொரோனாவுக்கு முன்பிருந்த 10.5 முதல் 11 சதம் வரை செயல்பாட்டு லாப விகிதம் அதிகரிக்கும். மேலும், அந்த நிறுவனங்களின் வருவாய் 8 முதல் 10 சதம் வரை அதிகரிக்கும் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. றிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love