February 3, 2023

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி நாமக்கல் ஆட்சியர் தொடங்கி வைத்தார்

நாமக்கல், டிச.1

ஐக்கிய நாடுகளின் எய்ட்ஸ் சம்மேளனம் 1988ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தது. ஒவ்வொரு தனிநபரும் எச்.ஐ.வி இல்லா சமூகம் உருவாக தங்களின் அர்ப்பணிப்பையும் பங்களிப்பையும் அளிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு சமப்படுத்துதல் கருத்தினை மையக்கருத்தாக கொண்டு அனைத்து நிலையிலும் எச்ஐவி இல்லா சமூகம் உருவாக பங்களிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் எர்.ஐ.வி உள்ளோர்களை கண்டறிய அதிக நம்பிக்கை மையங்கள் மற்றும் கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் உள்ளன. தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் எய்ட்ஸ் இல்லாத சமுதாயம் உருவாக எச்.ஐ.விஃஎய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்டிப்படையில், நாமக்கல் மோகனூர் சாலை, அண்ணா சிலை அருகில் உலக எய்ட்ஸ் தினத்தையயாட்டி மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் தலைமையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த பேரணியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும்இ பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்களில் விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டுதல், துண்டு பிரசுரங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

Spread the love