January 22, 2023

உலகின் பெரிய கேமிங் சந்தையாக
இந்தியா உருவெடுக்கும்: நிக்கோ பாட்னர்ஸ் ஆய்வு

புது தில்லி, டிச.1

சமீப காலங்களில் வீடியோ கேமிங் துறையில் இந்தியாவின் பங்கு மிகப் பெரும் அளவில் அதிகரித்துள்ளது. முக்கியமாக கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் இந்தியாவில் கேமிங் சந்தையின் வளர்ச்சி 396.4 மில்லியன் கேமர்களுடன் உலகின் இரண்டாவது மிகப் பெரிய கேமிங் சந்தையை கொண்டுள்ள நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: தற்போது 50.2% கேமர்களுடன் ஆசியாவின் முதல் 10 இடங்களில் இந்தியா இடம் பிடித்துள்ளது என்று நிக்கோ பாட்னர்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.மேலும் இந்தியாவில் கேமிங் துறைக்கான சந்தையானது அடுத்த ஐந்து வருடத்தில் 21% வரை வருவாய் ஈட்ட கூடும் என்றும் மிக அதிகமாக வளர்ந்து வரும் துறைகளில் கேமிங் துறையும் ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிக்கோ பார்ட்னர்சின் ஏசியா 10 பி.சி மற்றும் மொபைல் கேம் சந்தையானது 2020ம் ஆண்டில் 35.9 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்றும், 2026ம் ஆண்டில் இதன் வருவாய் 41.4 பில்லியன் டாலராக பெருகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கேமிங் மூலம் கிடைக்கும் வருவாயை விட, இந்தியாவில் கேமர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது எனவும், நிகோ பார்ட்னர்ஸின் ஆசியா-10 பி.சி மற்றும் மொபைல் கேமர்களின் எண்ணிக்கை 2022- ல் 788.7 மில்லியன் ஆக இருக்கும் என்றும் 2026 ஆம் ஆண்டு வாக்கில் 1.06 பில்லியன் என்ற எண்ணிக்கையை தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை கேமிங் துறையில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளாக உள்ளன. ஜப்பான் மற்றும் கொரியா 77 சதவீத வருவாயுடன் கேமிங் துறையில் முன்னிலை வகிக்கும் நாடாக இருந்து வருகிறது.

Spread the love