December 8, 2022

உலகளவில் மின் சேகரிப்புத் துறையில் முதலீடு
66 சதம் அதிகரிப்பு: மெர்காம் கேப்பிடல் தகவல்

புது தில்லி, அக்.27

உலகளவில் மின்னாற்றல் சேமிப்பு மற்றும் அறிதிறன் மின் கட்டமைப்பு துறைகளில் மேற்கொள்ளப்படும் முதலீடு 66 சதம் வளர்ச்சியடைந்துள்ளதாக சந்தை ஆய்வு நிறுவனமான மெர்காம் கேப்பிட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து மெர்காம் கேப்பிட்டல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மின்னாற்றல் சேமிப்பு, சிக்கனமான மின் விநியோகத்துக்கான அறிதிறன் கட்டமைப்பு ஆகிய துறைகளில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் உலகம் முழுவதும் 2,500 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டின் இதே மாதங்களில், இந்தத் துறைகளில் 1,510 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டது. அதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் கடந்த செப்டம்பர் வரை மேற்கொள்ளப்பட்ட முதலீடு 66 சதம் அதிகமாகும். புதைபடிவ எரிபொருள்களில் இருந்து புதுப்பிக்கத்தக்க எரிபொருள்களுக்கு எரிசக்தித் துறை வேகமாக மாறி வரும் நிலையில், மின்னாற்றல் சேமிப்பு மற்றும் அறிதிறன் மின் கட்டமைப்புத் துறைகளில் முதலீடுகள் குவிந்து வருகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love