October 3, 2022

உலகளவில் ஒமிக்ரான் தொற்றால்
130 மில்லியன் பேருக்கு பாதிப்பு: டபிள்யூயஹச்ஓ

ஜெனீவா, பிப்.9

ஒமிக்ரான் தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை வியக்க வைத்தாலும், அதன் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றின் மாறுபாடாக கருதப்படும் ஒமிக்ரான் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பரிக்காவில் இருந்து முதல்முறையாக பரவத் தொடங்கியது. இது மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. ஆனால், இதனால் பெரிதாக பாதிப்பு இல்லை என்றே கருதி வந்த நிலையில், உலகளவில் கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரை சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார மையத்தின் மேலாளர் அப்டி மஹமுட் தெரிவித்துள்ளதாவது:

கொரோனாவின் மாறுபாடான ஒமிக்ரான் தொற்று அறிவிக்கப்பட்டது முதல், இதுவரை உலகளவில் 130 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையில் அரை மில்லியன் இறப்புகள் பதிவாகியுள்ளது. ஒமைக்ரானின் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை வியக்க வைத்தாலும், உண்மையான பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும்.

மேலும் ஒமிக்ரான் தொற்றை நாம் இன்னும் முழுமையாக கடக்கவில்லை. அதன் முடிவை நெருங்கி வருகிறோம் என்று நம்புகிறோம். பல நாடுகள் இன்னும் ஒமைக்ரானின் தொற்று உச்சத்தை கடக்கவில்லை. பல வாரங்களாக தொடர்ச்சியாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மிகவும் கவலையாக இருப்பதாகக் கூறினார்.

Spread the love