October 3, 2022

உதான் விமானங்கள் திட்டத்தின் கீழ் 86.05 லட்சம் பேர் பயணம் செய்தனர்

புது தில்லி, பிப்.8

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே.சிங் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: பிராந்திய விமான இணைப்பை ஊக்குவிக்கவும், மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கவும் உதான் திட்டத்தை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கியது.

இதுவரை, 65 விமான நிலையங்கள் மூலம் 403 வழித்தடங்கள் (யஹலிகாப்டர்கள், 2 நீர் விமான நிலையங்கள் உட்பட) செயல்பாட்டில் உள்ளன. உதான் திட்டம் தொடங்கப்பட்டது முதல், கடந்த ஜனவரி 9ம் தேதி வரை, தோரயமாக 86.05 லட்சம் பயணிகள், உதான் திட்ட விமானங்களில் பயணித்துள்ளனர். இரண்டாம் நிலை, 3-ம் நிலை நகரங்களில் மக்களின் பயண முறைகளை உதான் மாற்றியமைத்துள்ளது.

Spread the love