October 3, 2022

உதய் எக்ஸிபிரஸ் ரயிலில்
வி கேர் நிறுவன பிராண்டிங் அறிமுகம்

சென்னை, செப்.5

கோவை – பெங்களூரு வழியில் இயக்கப்படும் உதய் எக்ஸிபிரஸில் வி கேர் நிறுவன பிராண்டிங் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கரோலின் பிரபா ரெட்டி தெரிவித்துள்ளதாவது:

தென்னக ரயிவேயில் தற்போது ரயில் இன்ஜிங், ரயில் கோச், ரயிலில் உள் மற்றும் வெளிப்பகுதி என அனைத்திலும் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை வி கேர் நிறுவனத்தின் விளம்பரம் ரயிலின் உள் மற்றும் வெளிப்பகுதியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் கொடுக்கப்பட்டுள்ள க்யூஆர் கோடு மூலம் இந்தியாவில் உள்ள வி கேர் நிறுவனத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகளைத் தெரிந்துகொள்ளலாம்.

இந்த தனித்துவமான பிரசாரத்தின் மூலம் விகேர் முடி மற்றும் தோல் சிகிச்சைகள் பற்றிய விழிப்புணர்வை பல்வேறு நகரங்களில் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், வி கேர் குழுமத்தின் சிஇஓ முகுந்தன் சத்திய நாராயணன், சேலம் கோட்ட முதுநிலை மண்டல வர்த்தக மேலாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Spread the love