February 3, 2023

உணவு டெலிவரி சேவையை நிறுத்த அமேசான் திட்டம்

புது தில்லி, நவ26

அமேசான் அகாதெமியைத் தொடர்ந்து உணவு விநியோக சேவையை நிறுத்த அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: இந்தியாவில் பொருளாதார சூழ்நிலையை சீர்செய்யும் பொருட்டு மெட்டா, ட்விட்டர், கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அமேசான் நிறுவனம், உயர்கல்வி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் அமேசான் அகாதெமியை மூட முடிவு செய்துள்ளதாக அண்மையில் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து உணவு டெலிவரி சேவையை நிறுத்தவும் அமேசான் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் சோதனையில் உள்ள உணவு விநியோக சேவையை டிசம்பர் 29 முதல் நிறுத்துவதாக அமேசான் இ-காமர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும், வருடாந்திர செயல்பாட்டு திட்டமிடல் மற்றும் மதிப்பீட்டின் ஒரு பகுதியாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

Spread the love