October 3, 2022

உங்கள் துறையில் முதலமைச்சர்திட்டத்தின் கீழ்
காவலர்களிடம் முதல்வர் மனுக்களை பெற்றுக்கொண்டார்

சென்னை, செப்.22

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறற நிகழச்சியில, காவலர்களின் குறைகளை களைந்திடும் வகையில் உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காவலர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

மக்களுக்காக இரவு பகல் பாராமல் பணியாற்றிவரும் காவலதுறையினரின் நலன் காத்திட – காவலர்கள் தங்கள் உடலநலனைப் பேணிக் காத்திடவும், தங்கள் குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடவும் இரண்டாமநிலைக் காவலர் முதல் தலைமைக் காவலர்கள் வரையிலான ஆளிநர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கியது, காவல் அளிநர்களுக்கு வழங்கப்படும் காபப்டடுத் தொகையினை நுநு இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கியது, இரவு ரோந்துப் பணிக்கு செல்லும் அனைத்து காவல் அளிநர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் வரையிலான அதிகாரிகளுக்கு சிறப்புப் படியாக மாதம் ரூ.300/- வழங்கியது, 15 நாட்களுக்கு ஒரு முறை உதவி ஆயவாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்குதல், காவல் ஆளிநர்கள் விடுப்பு எடுக்க வசதியாக சென்னை பெருநகர காவல்துறையால் உருவாக்கப்பட்ட கிளாப் விடுப்பு செயலி வெளியீடு, காவலர்களுக்கான இடர்படியை ரூ.1000/- ஆக உயர்த்தியது போன்ற பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், காவலர்களின் குறைகளை கேட்டு அவற்றை களைந்திட உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், காவலதுறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு சென்று காவலர்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெறறு, அவர்களின் குறைகளைக் கேட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து, முதல்வர் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் பதிவேட்டில் குறிப்பு எழுதி கையயாப்பமிட்டார்.

Spread the love