September 27, 2022

ஈரானின் யுரேனியம் கையிருப்பு
மேலும் அதிகரிப்பு: ஐஏஇஏ தகவல்

புது தில்லி, செப்.8

அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் மேலும் கூடுதலாக கையிருப்பு வைத்துள்ளதாக ஐ.நா. சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு (ஐஏஇஏ) தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜெர்மனியுடன் 2015ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில், யுரேனியம் கையிருப்பை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க ஈரான் ஒப்புக்கொண்டது. அந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகி, தங்கள் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்ததைத் தொடர்ந்து ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக யுரேனியம் கையிருப்பை அந்த நாடு அதிகரித்து வருகிறது.

Spread the love