September 27, 2022

இஸ்ரோவின் ககன்யான் திட்டம்
2024ல் செயல்படுத்தப்படும்: ஜிதேந்திர சிங்

புது தில்லி, செப்.14

இஸ்ரோவின் கனவு திட்டங்களில் ஒன்றான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் 2024ல் செயல்படுத்தப்படும் என மத்திய விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் கனவு திட்டங்களில் ஒன்று மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம். ரூ.10 ஆயிரம் கோடி செலவிலான இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி 2018ல் தன் சுதந்திர தின உரையின்போது தெரிவித்தார். தற்போது முழு வீச்சில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதற்கான சோதனை ஓட்டம் இந்தாண்டுக்குள் நடத்தி முடிக்கப்படும். இதைத் தொடர்ந்து வரும் 2024-ல் ககன்யான் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

Spread the love