December 8, 2022

இலங்கை துறைமுகத்துறையில் களமிறங்கியது அதானி குழுமம்

புது தில்லி, நவ.10

அதானி குழுமம் இலங்கையின் துறைமுகத் துறையில், முதல் இந்திய ஆபரேட்டராக களமிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

கொழும்பு துறைமுகத்தின் டபுள்யு சிடி எனும், மேற்கு கொள்கலன் முனையத்தின் நிர்மாணப் பணிகள், துவங்கியுள்ளன.

கிட்டத்தட்ட, ரூ.5,750 கோடி மதிப்பிலான டபுள்யுசிடியின் கூட்டு முயற்சியில், அதானி குழுமம், பெரும்பான்மை பங்கை பெற்றுள்ளது.

மேலும், இலங்கையின் துறைமுக வரலாற்றில், இதுவே மிகப்பெரிய அன்னிய முதலீடு என கருதப்படுகிறது. இந்த கூட்டு முயற்சியில், இலங்கை அரசின் துறைமுக ஆணையத்துக்கு 15 சத பங்குகளும்; உள்நாட்டு நிறுவனமான ஜான் கீல்ஸ் நிறுவனத்துக்கு 34 சத பங்குகளும் உள்ளன.

இதற்கு முன், கடந்த 2019ம் ஆண்டில், இந்தியா மற்றும் ஜப்பான் கூட்டில், கிழக்கு கொள்கலன் முனைய மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையயழுத்தானது. ஆனால், அந்நாட்டு அரசியல் அமைப்புகள் மற்றும் வர்த்தக சங்கங்களின் எதிர்ப்பால் இம்முயற்சி பின்னர் கைவிடப்பட்டது. இதன்பின், கடந்த 2021ல், டபுள்யு.சி.டி., ஒப்பந்தம் ஏற்பட்டது. இதற்கான நிர்மாண பணிகள் 2024ல் முழுமையடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love