கொழும்பு, டிச.6
இலங்கை பால் பொருள்களுக்கு இறக்குமதியைச் சார்திருப்பதைக் குறைத்து, அந்நாட்டின் பால் தொழில் வளம் மற்றும் பால் உற்பத்தியை அதிகரிக்க, இந்தியா தொழில்நுட்ப உதவிகளை வழங்க உள்ளதாக இலங்கையின் அதிபர்அலுவலகம் தெரிவித்ததுள்ளது. இது குறித்து வெளிவந்துள்ள செய்தியாவது:
இலங்கை அதிபரின் தலைமைச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இந்தியாவின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (என்டிடிபி) மற்றும் “அமுல்’ பால் பொருள்களை விற்பனை செய்யும் குஜராத் கூட்டுறவு பால் வர்த்தக சங்கம் உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, இலங்கையில் பால் உற்பத்தியை அதிகரிக்க தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும், பால் பொருள்களுக்கு இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில், உள்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக என்டிடிபி உடன் இணைந்து குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்களைத் தயாரிக்க பொது மற்றும் தனியா?? துறைகளில் இருந்து பிரதிநிதிகளைக் கொண்ட குழுவை அதிபர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குழந்தைகளுக்கிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ள நிலையில், உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசு இம்முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.