October 3, 2022

இலங்கைக்கு ரூ.300 கோடி அமெரிக்கா நிதியுதவி

election day in washington

கொழும்பு, செப்.12

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு ரூ.300 கோடியை அமெரிக்கா வழங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: சுதந்திரத்துக்குப் பிறகு காணாத பெரும் பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வருகிறது. சீனாவிடம் இருந்து அந்நாடு அதிக கடன்களைப் பெற்றுள்ள நிலையில், தற்போது இலங்கைக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பெரும் உதவிகளை வழங்கி வருகின்றன.

ஐஎம்எப்பிடம் இருந்து கடன் பெறுவதற்கான முதல்கட்ட ஒப்பந்தத்தில் இலங்கை அரசு அண்மையில் கையயாப்பமிட்டது. இந்நிலையில், உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருள்களை வாங்குவதற்காக இலங்கைக்கு சுமார் ரூ.300 கோடி கடன் வழங்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. இலங்கையில் அடுத்த சாகுபடி பருவம் தொடங்கவுள்ள நிலையில், இந்த நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க பிரதிநிதியான சமந்தா பவர், இலங்கையின் வேளாண் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். அதையடுத்து இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள 30 சத மக்கள், உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சமந்தா பவர், அமெரிக்காவின் நிதியுதவியால் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பலன் பெறுவார்கள் என்றார்.

Spread the love