September 27, 2022

இலங்கைக்கு அதிக கடன் வழங்கியதில் நடப்பாண்டில் இந்தியா முதலிடம் பிடித்தது

கொழும்பு, செப்.16

நடப்பாண்டில், இலங்கைக்கு அதிக கடன் வழங்கியதில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது: முன்னெப்போதும் இல்லாத அரசியல் நெருக்கடி மற்றும் பொருளாதார கொந்தளிப்பில் சிக்கித் தவித்து வருகிறது இலங்கை. நிலைமையை சமாளிக்க உலகின் பல நாடுகளிலிருந்தும் கடன் பெற்று வருகிறது. அப்படி கடன் வழங்கியதில் முதலிடத்தை இந்தியா பிடித்துள்ளது.

நடப்பாண்டில் மட்டும், இந்தியா ரூ.3,016 கோடியை இலங்கைக்கு கடனாக வழங்கி உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில், ஆசிய மேம்பாட்டு வங்கி’ உள்ளது. இவ்வங்கி ரூ.2,880 கோடி கடனை வழங்கி உள்ளது. இலங்கைக்கு, நடப்பாண்டில் இதுவரை மொத்தம் ரூ.7,744 கோடி கடனாக வழங்கப்பட்டு உள்ளது. இதில், இந்தியாவின் பங்கு ரூ.3,016 கோடியாக உள்ளது. இதற்கு முன், இலங்கைக்கு அதிகம் கடன் வழங்கிய நாடு சீனாவாகும். கடந்த 2021ல் ரூ.7,576 கோடியை, சீனா வழங்கியது. இதில் ரூ.6,472 கோடி, சீன மேம்பாட்டு வங்கியிடமிருந்து இலங்கை பெற்றது. மேலும், இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் ரூ.4.08 லட்சம் கோடி. இதில், ரூ.2.24 லட்சம் கோடியை, 2027ம் ஆண்டுக்குள் செலுத்த வேண்டிய நிலையில் இலங்கை உள்ளது.

Spread the love