October 3, 2022

இரு பேஸ்லிப்ட் வாகனங்களை
வால்வோ அறிமுகம் செய்கிறது

மும்பை, செப்.13

வால்வோ இந்தியா நிறுவனம் விற்பனை செய்து வரும் தனது கார்களின் பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

புதிய பேஸ்லிப்ட் மாடல்கள் விலையை வால்வோ நிறுவனம் செப்டம்பர் 21 ஆம் தேதி அறிவிக்க இருக்கிறது.

அதிகம் எதிர்பார்க்கப்படும் வால்வோ எக்ஸ்சி 40 இம்முறை பெட்ரோல் மட்டுமின்றி மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்சனிலும் கிடைக்கும் என தெரிகிறது. மேலும், இதே காரின் டீசல் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்பட்டு பெட்ரோல் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது இந்த மாடலுக்கு மாற்றாக 2023 வேரியண்ட் அறிமுகமாகிறது.

புதிய பேஸ்லிப்ட் மாடலில் கூர்மையான ஹெட்லைட்கள், ஃபிரேம்லெஸ் கிரில், ட்வீக் செய்யப்பட்ட பம்ப்பர்கள், புதிய எக்ஸ்டீரியர் பெயிண்ட் ஆப்சன்கள் வழங்கப்படுகிறது. எக்ஸ்சி 40 மாடல் மட்டுமின்றி வால்வோ எக்ஸ்சி 90 மாடலும் அப்டேட் செய்யப்பட இருக்கிறது. வால்வோ எக்ஸ்சி 90 புது வெர்சனில் புதிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

மேலும், இந்த கார்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் விலை அறிவிக்கப்பட்ட பின் துவங்கும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love