November 29, 2022

இரும்பு வெட்டும் சீன கருவிக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரியில்லை: மத்திய அரசு முடிவு

புது தில்லி, நவ.9

இரும்பு போன்ற உலோகம் வெட்டும் சீன சக்கர கருவிக்கு பொருள் குவிப்புத் தடுப்பு வரி விதிக்க வேண்டாம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரு பொருள், வெளிநாட்டில் இருந்து குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்பட்டால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். அத்துடன் அந்தப் பொருள்கள் அதிக அளவில் வாங்கி குவிக்கப்படுவது நிகழக் கூடும். மேலும், இதனைத் தடுக்கவும், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சந்தையில் சம வாய்ப்பை வழங்கவும் உலக நாடுகள் வரி வதிக்க சர்வதேச வர்த்தக விதிமுறைகள் அனுமதிக்கின்றன. இது பொருள் குவிப்புத் தடுப்பு வரி எனப்படுகிறது.

இந்நிலையில், இரும்பு, இரும்பு அல்லாத பொருள்களை வெட்டுதல், வெல்டிங் உள்ளிட்டவைகளுக்காக சீனாவின் சக்கர வடிவிலான உலோகக் கருவி பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கருவிக்குப் பொருள் குவிப்புத் தடுப்பு வரி விதிக்க வர்த்தகத் தீர்வுகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிடிஆர்) மத்திய நிதியமைச்சகத்துக்குப் பரிந்துரைத்தது. மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிஜிடிஆரின் அந்தப் பரிந்துரையை நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய் துறை நிராகரித்துள்ளது. மேலும், இதன் மூலம், அந்தக் கருவிக்கு பொருள் குவிப்புத் தடுப்பு வரி விதிக்க வேண்டாம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Spread the love