November 29, 2022

இரண்டாம் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் ரூ.945 கோடி நிகர இழப்பை சந்தித்தது

புது தில்லி, நவ.10

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில், ரூ.945 கோடி ஒருங்கிணைந்த நிகர இழப்பை சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இருப்பினும், கடந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், ஒருங்கிணைந்த நிகர இழப்பு ரூ.4,442 கோடியாக இருந்த நிலையில், தற்போது இழப்பு குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜாகுவார் லேண்டு ரோவர், உள்நாட்டு பயணியர் மற்றும் வர்த்தக வாகனங்கள் விற்பனை அதிகரித்ததை அடுத்து, இழப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதிப்பீட்டு காலத்தில், நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.80,650 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் மின்சார வாகன விற்பனை, கடந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும்போது, 326 சதம் அதிகரித்துள்ளது. இக்காலக் கட்டத்தில், மொத்தம் 11,522 மின்சார வாகனங்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

Spread the love