புது தில்லி, ஜன.21
பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியாளரான கார்மின் இந்திய சந்தையில் புதிய இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்துள்ளது.
புது சீரிசில் – இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் மற்றும் இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் சோலார் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரு மாடல்களிடையே உள்ள ஒற்றை வித்தியாசம், கிராஸ்ஒவர் சோலார் மாடல் சூரிய சக்தி கொண்டு சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் வசதி கொண்டுள்ளது.
புதிய கார்மின் இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் மாடலில் கார்மின் நிறுவனத்தின் அனைத்து உடல்நல அம்சங்கள், மேம்பட்ட ஸ்லீப் மாணிட்டரிங், ஸ்லீப் ஸ்கோர், யஹல்த் மாணிட்டரிங் போன்ற அம்சங்கள் உள்ளது. இதன் சோலார் வேரியண்ட் 70 மணி நேரத்திற்கான பேட்டரி லைஃப் வழங்குகிறது.
இந்த புது ஸ்மார்ட்வாட்ச்களில் சூப்பர்-லூமி நோவா-கோட் செய்யப்பட்ட அனலாக் மற்றும் டஃப் டிசைன் உள்ளது. கார்மின் இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் – ஸ்மார்ட்வாட்ச் மோடில் கிட்டத்தட்ட ஒரு மாதத்தற்கு பேட்டரி லைஃப் வழங்குகிறது. ஜிபிஎஸ் மோடில் 110 மணி நேரத்திற்கும் அதிக பேட்டரி லைஃப் கொண்டுள்ளது. இத்துடன் ஸ்லீப் ஸ்கோர், மேம்பட்ட ஸ்லீப் மாணிட்டரிங், ஹெல்த் மாணிட்டரிங் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. கார்மின் இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் மாடல் பிளாக் நிறத்திலும், இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் சோலார் கிராஃபைட் சோலார் கிராபைட் நிறத்திலும் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 55 ஆயிரத்து 990 மற்றும் ரூ. 61 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.