September 27, 2022

இன்ஸ்டாமார்ட் தளத்தின் டெலிவரி சேவையை இரவு முழுவதும் நீட்டிக்க ஸ்விக்கி திட்டம்

சென்னை, செப்.15

இந்தியாவின் முன்னணி உணவு மற்றும் மளிகை பொருட்கள் டெலிவரி சேவை நிறுவனமான ஸ்விக்கி தனது இன்ஸ்டாமார்ட் தளத்தின் டெலிவரி சேவையை இரவு முழுவதும் நீட்டிக்கத் திட்டமிட்டுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதேபோல் இத்திட்டத்தை முதலில் தேர்வு செய்யப்பட்ட சில நகரங்களில் மட்டும் சோதனை செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: ஜப்பான் சாப்ட்பேங்க் முதலீட்டில் இயங்கும் ஸ்விக்கி நிறுவனம் ஜூன் வரையிலான 12 மாதத்தில் 16 மடங்கு அதிக ஆர்டர்களை ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தளத்தில் இருந்து பெற்றுள்ளது. இதேபோல் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தளத்திற்குப் பெங்களூர், மும்பை, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் இருந்து அதிக வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ஏற்கனவே காலை 7 மணி முதல் இரவு 1 மணி வரையில் நாட்டின் 25 நகரங்களில் சேவை அளிக்கும் நிலையில் தற்போது சில நகரங்களில் டெலிவரி சேவையைச் சுமார் 3 மணி வரையில் டெலிவரி சேவையை விரிவாக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து ஸ்விக்கி செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில், நகராட்சி விதிமுறைகளுக்கு இணங்க ஸ்விக்கி கடைகள் மற்றும் டெலிவரி பார்ட்னர்-கள் உடன் இணைந்து சுமார் 5000 பொருட்களை (உணவு பொருட்கள், தின்பண்டங்கள், அவசர சேவை பொருட்கள்) காலை 3 மணி வரையில் டெலிவரி செய்யும் கட்டமைப்பை உருவாக்கி சில நகரங்களில் மட்டும் செயல்படுத்தி வருகிறோம் என்றார்.

இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஒய் காம்பினேட்டர் நிறுவன முதலீட்டில் இயங்கும் டன்சோ சில நகரங்களில் 24ஒ7 மணிநேரமும் டெலிவரி செய்யும் அமைப்பை உருவாக்கி வருகிறோம், இதேபோல் ஜெப்டோ 10 நகரங்களில் 1 மணி வரையில் டெலிவரி செய்வதாக அறிவித்துள்ளது.

Spread the love