மும்பை, ஜன.21
மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியில் குயிட் மோட் பெயரில் புது அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த அம்சம் பயனர்கள் தளத்தில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க உதவுகிறது. செயல்படுத்தும் பட்சத்தில், குயிட் மோட் அம்சம் நோட்டிஃபிகேசன்களை மியூட் செய்து, டைரக்ட் மெசேஜ்களுக்கு தானாக பதில் அளிக்கிறது. புதிய இன்ஸ்டாகிராம் அம்சம் தற்போது அமெரிக்கா, பிரிட்டன், ஐயர்லாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என உலகின் சில நாடுகளில் மட்டும் முதற்கட்டமாக வழங்கப்படுகிறது.
இந்தியா உள்பட மற்ற நாடுகளில் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் இளைஞர்கள் கோரிக்கையை அடுத்து வழங்கப்பட்டுள்ளது. இந்த குயிட் மோட் பயனர்கள் கஸ்டமைஸ் செய்ய முடியும். யட்யுல் செய்ததும், இந்த அம்சம் நோட்டிஃபிகேசன்களை விரைவாக காண்பிக்கிறது. அனைவரும் குயிட் மோட் அம்சத்தை பயன்படுத்தலாம், எனினும், இளைஞர்கள் இதனை பயன்படுத்த பரிந்துரை வழங்குவோம் என இன்ஸ்டாகிராம் தெரிவித்து இருக்கிறது.
இதுதவிர இன்ஸ்டாகிராம் செயலியில் பேரண்டல் சூப்பர்வின் டூல்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இவை பயனர்கள் தளத்தில் பார்க்கும் தரவுகளை அதிகளவில் கண்ட்ரோல் செய்ய உதவும். பரிந்துரைகளில் துவங்கி, பயனர்கள் இனி தங்களுக்கு விருப்பமில்லாத தரவுகளை மறைத்து வைக்க செய்யலாம். இந்த வசதி எக்ஸ்ப்ளோட் ஃபீட் மட்டுமின்றி ரீல்ஸ், சர்ச் உள்ளிட்டவைகளிலும் இயங்குகிறது. பரிந்துரைக்கப்படும் பதிவுகளின் கமெண்ட்ஸ் மற்றும் டைரக்ட் மெசேஜ்களில் குறிப்பிட்ட வார்த்தைகளை மறைக்கும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கான வசதியை பிரைவசி செட்டிங்ஸ்-இல் உள்ள ஹிடன் வேர்ட்ஸ் பகுதியில் இயக்க முடியும்.