October 4, 2022

இந்திய விமானப் போக்குவரத்து
2040க்குள் 7 சதம் அதிகரிக்கும்: போயிங்

புது தில்லி, செப்.2

வரும் 2040ம் ஆண்டுக்குள் இந்தியாவில் பயணிகள் விமானப் போக்குவரத்து 7 சதம் வளர்ச்சியடையும் என்று போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து போயிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டேவிட் ­ல்டே தெரிவித்துள்ளதாவது:

கொரோனா நெருக்கடியால் முடங்கியிருந்த இந்திய பயணிகள் விமானப் போக்குவரத்துத் துறை, அதிலிருந்து மிக வலுவாக மீண்டு வருகிறது. இதன் காரணமாக, உலகில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் துறைகளில் ஒன்றாக இந்திய விமானப் போக்குவரத்துத் துறையும் ஒன்றாகியிருக்கிறது. வரும் 2040ம் ஆண்டு வாக்கில் இந்திய விமானப் பயணிகள் போக்குவரத்து 6.9 சத வளர்ச்சியைக் காணும் என்றார் அவர்.

இதைப் போல, தென்கிழக்கு ஆசிய விமானப் போக்குவரத்து சந்தை 5.5 சதமும், சீன சந்தையின் மதிப்பு 5.4 சதமும் வளர்ச்சியடையும். ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க விமானப் போக்குவரத்து சந்தைகள் முறையே 5.4 மற்றும் 4.8 சதம் வளர்ச்சியடையும் என்று போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love