October 4, 2022

இந்திய ரூபாயின் உறுதித்தன்மை உயர்வு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்

புது தில்லி, செப்.13

கடந்த சில ஆண்டுகளில் மற்ற நாட்டு செலாவணிகளுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் மதிப்பின் உறுதித்தன்மை அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:

இந்திய ரூபாய் தனித்தன்மையுடன் திகழ்கிறது. பணவீக்கம், முதலீடுகளின் வருகை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ரூபாய் செயல்பட்டு வருகிறது என்றார்.

கடந்த சில ஆண்டுகளில் மற்ற நாட்டு செலாவணிகளுடன் ஒப்பிடுகையில், கடினமான சூழலில் இருந்து விரைந்து மீளும் தன்மை கொண்ட செலாவணியாக இந்திய ரூபாய் வலுப்பெற்றுள்ளது.

மேலும், கடந்த 2014ம் ஆண்டுக்கு முன் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் ஆண்டு வீழ்ச்சி விகிதம் 3.25 முதல் 3.5 சதவீதமாக இருந்தது. இது தற்போது ஆண்டுக்கு 2.5 சதமாகக் குறைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இந்திய ரூபாய் வலுவடைந்து வருவதை இது வெளிக்காட்டுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதை சாதகமாகக் கருதாமல், பொருள்களின் தரத்தை உயா்த்துவதில் ஏற்றுமதியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். சர்வதேச வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை இந்திய ஏற்றுமதியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Spread the love