February 2, 2023

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை
மத்திய எரிசக்தி அமைச்சகம் இடையே ஒப்பந்தம்

புது தில்லி, ஜன.21

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை 2022-23-ஆம் நிதியாண்டுக்கான செயல்திறன் தொடர்பாக மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையயழுத்திட்டுள்ளது. மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் திரு பூபிந்தர் சிங் பல்லா மற்றும் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு பிரதீப் குமார், இந்த ஒப்பந்தத்தில் கையயழுத்திட்டனர்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையின் இந்த ஆண்டு வருவாயாக ரூ.3,361 கோடி என்ற இலக்கை எட்டுவதற்கு நிர்ணயித்துள்ளது. இது முந்தைய ஆண்டு வருவாயைவிட 18% அதிகமாகும். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை தலைவர் பிரதீப் குமார், கடந்த 2 ஆண்டுகளில் இந்த முகமையின் மிகச் சிறப்பான செயல்பாடுகளைக் கொண்டிருந்ததாகக் கூறினார். இந்த ஆண்டும் இலக்குகளை அடைய முழுவீச்சில் செயலாற்றி வருவதாக அவர் கூறினார்.

இந்த அமைப்பு தற்போது வரை 3,068 புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கு கடன்களை வழங்கியுள்ளது. நாட்டில் 19,502 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை கூடுதலாக மேற்கொள்ள இது பங்களிப்பை வழங்கியுள்ளது.

Spread the love