October 3, 2022

இந்திய சந்தையில் பொலிரோ சீரிஸ் விலை மஹிந்திரா நிறுவனம் உயர்த்தியது

சென்னை, செப்.21

இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் தனது பொலிரோ மற்றும் பொலிரோ நியோ மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது.

விலை உயர்வின் படி மஹிந்திரா பொலிரோ பி4 மற்றும் பி6 (ஓ) வேரியண்ட்களின் விலை முறையே ரூ.20,701 மற்றும் ரூ.22 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதே போன்று பொலிரோ நியோ என்4, என்10 மற்றும் என்10(ஓ) மாடல்கள் விலை முறையே ரூ.18,800, ரூ.21,007 மற்றும் ரூ.20,501 உயர்த்தப்பட்டு இருக்கிறது.

மேலும், விலை உயர்வு தவிர இரு மாடல்களின் அம்சங்களிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. தோற்றத்தில் இரு கார்களிலும் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய லோகோ மட்டும் இடம்பெற்று உள்ளது. காரின் ஸ்டீரிங் வீல், முன்புற கிரில், வீல் ஹப் கேப்கள் மற்றும் டெயில் கேட் உள்ளிட்ட இடங்களில் லோகோ இடம்பெற்று இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா பொலிரோ மாடல் விலை ரூ.9 லட்சத்து 45 ஆயிரம் என துவங்குகிறது. பொலிரோ நியோ மாடல் விலை ரூ. 9 லட்சத்து 48 ஆயிரம் என துவங்குகிறது. மஹிந்திரா பொலிரோ நியோ டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பொலிரோ மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த என்ஜின் 75 யஹச்பி பவர், 210 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. பொலிரோ நியோ மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 100 ஹெச்பி பவர், 240 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இரு என்ஜின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

Spread the love