December 8, 2022

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் வருவாய் 2வது காலாண்டில் ரூ.1,327 கோடியாக உயர்வு

சென்னை, நவ.8

முன்னணி சிமென்ட் உற்பத்தி நிறுவனமான இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் ரூ.1,327 கோடியாக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில், ரூ.113.26 கோடியை நிகர இழப்பாக நிறுவனம் பதிவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ.29.75 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

மேலும், மதிப்பீட்டு மாதங்களில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் கடந்த ஆண்டின் இந்த காலகட்டத்தில் இருந்த ரூ.1,234.85 கோடியிலிருந்து 7.46 சதவீதம் அதிகரித்து இந்த முறை ரூ.1,327.06 கோடியாகியுள்ளது. நிறுவனத்தின் மொத்த செலவுகள் மதிப்பீட்டு மாதங்களில் 27.16 சதம் அதிகரித்து ரூ.1,528.01 கோடியாகியுள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதங்களில் அது ரூ.1,201.61 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love