November 29, 2022

இந்தியா கேட் பிராண்டுக்கு உலகளவில் அங்கீகாரம்
மோர்டோர் இன்டெலிஜென்ஸ் ஆய்வு தகவல்

புது தில்லி, அக்.28

நறுமணம், தனித்துவமிக்க சுவை உள்ளிட்ட சிறப்பம்சங்களுக்காக இந்தியா கேட் பிராண்ட் பாசுமதி அரிசிக்கு உலகின் நம்பர் 1 அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து மோர்டோர் இன்டெலிஜென்ஸ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய-பசிபிக், மத்திய கிழக்கு & ஆப்பிரிக்க கண்டங்களில் வெள்ளை மற்றும் பழுப்பு நிற பாசுமதிஅரிசி வகைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், இந்தியாவின் கேஆர்பிஎல் நிறுவனத்தின் இந்தியா கேட் உலகின் நம்பர் 1 பாசுமதி அரிசி பிராண்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிக தரம், பிரீமியம் தோற்றம், தனித்துவமான சுவை ஆகியவற்றுக்காக இந்தியா கேட் பாசுமதி அரிசிக்கு உலக அளவில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, இந்தியா கேட் பிராண்டின் பாசுமதி அரிசி வகைகள் 90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. மேலும், ஆண்டுக்கு 8 கோடிக்கும் அதிமான பாசுமதி அரிசி மூட்டைகள் இந்தியா கேட் பிராண்டின் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந் நிலையில், பாசுமதி அரிசிக்கான பிராண்டை தனித்துவமாக அடையாளப்படுத்துவதன் மூலம் கேஆர்பிஎல் நிறுவனம் கணிசமான வளர்ச்சியை எட்ட திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஆர்பிஎல் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அனில் குமார் மிட்டல் இது குறித்து தெரிவிக்கையில், நுகர்வோருக்கு தரமான தயாரிப்புகளை தர வேண்டும் என்பதில் நிறுவனம் நிபந்தனையற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது. அதனை அங்கீகரிக்கும் வகையில் பாசுமதி அரிசியின் பிரீமியம் தரத்துக்காக இந்தியா கேட் பிராண்டுக்கு உலகின் நம்பர் 1 அந்தஸ்தும், பாராட்டும் கிடைத்துள்ளது. நுகர்வோரிடையே தேவை அதிகரித்து வருவதையடுத்து தற்போதுள்ள 3 லட்சம் சில்லறை விற்பனையகங்களின் எண்ணிக்கையை 5 லட்சமாக அதிகரிக்க தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

Spread the love