November 29, 2022

இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகளில் ரசியாவுக்கு முதல் இடம்

புது தில்லி, நவ.3

இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகள் பட்டியலில் ரசியா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

கடந்த ஆகஸ்ட் மாதம் ரசியாவிலிருந்து இந்தியாவுக்கு கொள்முதல் செய்யப்பட்ட கச்சா எண்ணெயின் அளவு 2.4% குறைந்து, 8 லட்சத்து 55 ஆயிரத்து 950 பேரல்களாக இருந்தது. அதே வேளையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் செய்ததில் ஈராக் முதல் இடத்தையும், சவுதி அரேபியா 2வது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டன. இந் நிலையில், அக்டோபர் மாதம் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரசியாவின் பங்கு 22 சதம் அதிகரித்துள்ளது.

இதன்மூலம், ஈராக் (20.5%), சவுதி அரேபியா (16%) நாடுகளின் பங்களிப்பை ரசியா முந்தியது.

மேலும், இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் வரிசையில் ரசியாவிற்கு முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அக்டோபர் மாதம் ரசியாவிலிருந்து இந்தியாவுக்கு கொள்முதல் செய்யப்பட்ட கச்சா எண்ணெயின் அளவு ஒருநாளைக்கு 9 லட்சத்து 46 ஆயிரம் பீப்பாய்களாக உள்ளது. 2021ல் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியில் ர´யாவின் பங்கு 1% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love