September 27, 2022

இந்தியாவில் 300 பில்லியன் டாலர் மதிப்பில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி: அமைச்சர் தகவல்

புது தில்லி, செப்.21

ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதியில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி கிளஸ்டரில் இந்தியாவின் முதல் லித்தியம் செல் உற்பத்தி நிலையமான முனோத் இண்டஸ்ட்ரீஸை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பார்வையிட்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:

2025-26 ஆம் ஆண்டிற்குள் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான மின்னணு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி இலக்கை எட்டுவதே எங்கள் இலக்கு என்றும், இது 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி பதவியேற்றபோது இருந்ததை விட 24 மடங்கு அதிகம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்த கனவை நனவாக்க, ஒவ்வொரு ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கும், ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும் அரசு துணையாக நிற்கும் என்றும், நாம் அனைவரும் இணைந்து இந்த இலக்கை அடைய பயணம் செய்வோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

லித்தியம்-அயன் தொழிற்சாலையின் வணிகரீதியான உற்பத்தி மற்றும் முறையான விற்பனை அடுத்த மாதம் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தற்போது ஆலையின் நிறுவப்பட்ட திறன் 270 மெகாவாட் மற்றும் தினசரி 10ஏஎச் திறன் கொண்ட 20,000 செல்களை உற்பத்தி செய்ய முடியும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார். மேலும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி கிளஸ்டர்கள், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மையங்களாக வேகமாக மாறி வருகின்றன என்றும், அவர்கள் எதிர்காலத்தில் இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு ஒரு பெரிய பங்கை வகிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

Spread the love