November 29, 2022

இந்தியாவில் வியரபிள் சாதனங்களின் சந்தை
செப்டம்பர் காலாண்டில் 56 சதம் வளர்ச்சி: ஐடிசி

புது தில்லி, நவ.14

ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட, உடலில் அணிந்து கொள்ளக்கூடிய வியரபிள் சாதனங்களின் சந்தை, இந்தியாவில், கடந்த செப்டம்பர் காலாண்டில் 56 சதம் வளர்ச்சியை கண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து, பகுப்பாய்வு நிறுவனமான ஐடிசி மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவு அடைந்த காலாண்டில், இந்திய சந்தையில் மொத்தம் 3.72 கோடி வியரபிள் சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது, 56 சதம் உயர்வாகும்.

மேலும், செப்டம்பர் காலாண்டில், ஸ்மார்ட் வாட்ச் பிரிவில் மட்டும், விற்பனை 178.8 சதம் அதிகரித்து உள்ளது. இக்காலாண்டில் 1.20 கோடி ஸ்மார்ட் வாட்சுகள் விற்பனை ஆகியுள்ளன. மொத்த வியரபிள் பிரிவில் போட் எனும் பிராண்டு அதிகம் விற்பனை ஆகியுள்ளது. இதன் சந்தை மதிப்பு 32.1 சதமாக உள்ளது. நடப்பு ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் ஸ்மார்ட் வாட்சுகள், ரிஸ்ட் பேண்டுகள், இயர்போன்கள் ஆகியவை மொத்தமாக, கிட்டத்தட்ட ரூ.7.5 கோடி அளவுக்கு விற்பனை ஆகி உள்ளன. பண்டிகை காலம் மற்றும் அதையயாட்டி வழங்கப்பட்ட தள்ளுபடிகள் ஆகியவை, வியரபிள் சாதனங்கள் விற்பனை அதிகரிக்க உதவின. இவ்வாறு ஐடிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love