December 8, 2022

இந்தியாவில் யூடியூப் கிரியேட்டர்களால்
ரூ.6,800 கோடி வருவாய் கிடைத்துள்ளது

புது தில்லி, அக்.28

இந்தியாவில் யூ டியூப் மூலம் ரூ.6,800 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என்றும் 7 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்று யூ டியூப் தலைமை அதிகாரி தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: யூ டியூப் நிறுவனத்தின் தலைமை அதிகாரி நீல் மோகன் இணையதள வாயிலாக கண்டுபிடிப்பு, சமூகம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து நடந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் யூடியூப்பில் கதை உருவாக்கம் மூலம் ரூ.6,800 கோடி வருவாய் கிடைக்கிறது. இதன் மூலம் 7 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. கதை உருவாக்குபவர்களுக்கு பார்வையாளர்களை ஏற்படுத்தி கொடுப்பது மட்டுமில்லாமல் அவர்களுக்கு பொருளாதார வாய்ப்புகளையும் யூடியூப் அமைத்து கொடுக்கிறது. யூடியூப் என்பது விளம்பரம் சார்ந்த ஊடக தளம் என்பதால் அதில் சிறிய வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து விதமான வர்த்தகங்களும் ஊக்குவிக்கப்படுகின்றது” என்று தெரிவித்தார்.

Spread the love