December 9, 2022

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும்
வேலையின்மை விகிதம்: சிஎம்ஐஇ தகவல்

புது தில்லி, நவ.4

வேலையின்மை விகிதம் என்பது மீண்டும் கடந்த அக்டோபர் மாதம் அதிகரித்துள்ளது என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிம்ஐஇ) தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து சிஎம்ஐஇ தெரிவித்துள்ளதாவது:

கடந்த செப்டம்பர் மாதத்தில் 6.43% ஆக இருந்த வேலையின்மை விகிதம் 4 வருட சரிவில் காணப்பட்டது. இந்த நிலையில் இது கடந்த அக்டோபர் மாதத்தில் மீண்டும் 7.77% ஆக உச்சம் தொட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புற வேலையின்மை விகிதம் அக்டோபர் மாதத்தில் 8.04% ஆக அதிகரித்துள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் 5.84% ஆக குறைந்துள்ளது.

இதே செப்டம்பர் மாதத்தில் நகர்புறத்தில் வேலையின்மை விகிதம் 7.7% ஆக இருந்த நிலையில், அக்டோபரில் 7.21% ஆக குறைந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் வேலையின்மை அதிகரிப்புடன் தொழிலாளர் பங்கேற்பு விகிதமும் செப்டம்பரில் 39.3% ஆக இருந்த நிலையில், அக்டோபரில் 39% ஆக குறைந்துள்ளது. வேலைவாய்ப்பின்மை என்பது கிராமப்புறங்களில் குறைவாக இருந்தது. குறிப்பாக விவசாயம் அல்லாத கிராமப்புறங்களிலும் குறைவாக இருந்தது. விவசாயத்துறையில் வேலைவாய்ப்பானது கடந்த நவம்பர் 2021ல் 164 மில்லியனாக அதிகரித்துள்ளது. அதன் பின்னர் கடந்த செப்டம்பரில் 134 மில்லியனாகவும் குறைந்துள்ளது. அக்டோபர் 2022ல் 139.6 மில்லியனாகவும் அதிகரித்துள்ளது. எனினும் கடந்த ஆண்டினை காட்டிலும் இது குறைவு தான். அதே நேரம் நகரப்புற பகுதிகளில் வேலை விகிதம் சற்றே அதிகரித்துள்ளது. இது செப்டம்பரில் 126 மில்லியனாக இருந்த நிலையில், அக்டோபரில் 127.4 மில்லியனாகவும் அதிகரித்துள்ளது. இது அக்டோபர் மாதத்தில் 2.26 மில்லியன் சம்பளதாரர்கள் வேலை அதிகரித்துள்ளது.

Spread the love