December 8, 2022

இந்தியாவில் நிதி சேவை வணிகத்தை மூடுகிறது சியோமி

புது தில்லி, அக்.29

நிதி சேவை வணிகத்தை சியோமி நிறுவனம் மூடுவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்தியாவில் அதன் மி பைனான்ஷியல் சர்வீசஸ்’ வணிகத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் ஸ்மார்ட்போன் வணிகத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக, அதன் நிதி சேவைகள் வணிகத்தை மூட, சியோமி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம், கடந்த 2019ல் மி பே எனும் பணப்பரிவர்த்தனைக்கான சேவையையும், அடுத்து மி கிரெடிட் எனும் கடன் சேவையையும் அறிமுகம் செய்தது.

Spread the love