December 9, 2022

இந்தியாவில் நான்கு புது பைக்குகளை
கியூஜே நிறுவனம் அறிமுகம் செய்தது

புது தில்லி, நவ.18

கியூஜெ மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் எஸ்ஆர்சி250 ரெட்ரோ ரோட்ஸ்டர், எஸ்ஆர்வி500, எஸ்ஆர்சி300 குரூயிசர், எஸ்ஆர்கே400 ஸ்போர்ட் நேக்கட் என நான்கு மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இவற்றின் விலை ரூ. 1 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. புதிய கியூஜெ எஸ்ஆர்சி250 மாடல் டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடலுக்கு போட்டியாக அறிமுகமாகி இருக்கிறது.
இதில் 249சிசி, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 17.4 ஹெச்பி பவர், 17 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. கியூஜெ எஸ்ஆர்வி500 மாடலில் 480சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 25.5 யஹச்பி பவர், 36 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஒட்டுமொத்த எடை 250 கிலோ ஆகும். இதன் விலை ரூ. 2 லட்சத்து 59 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

குரூயிசர் மாடலான கியூஜெ எஸ்ஆர்வி 300 மாடலில் 296சிசி, வி-ட்வின் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 30.3 ஹெச்பி பவர், 26 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதன் விலை ரூ. 3 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். கியூஜெ எஸ்ஆர்கே400 மாடலில் 400சிசி, லிக்விட் கூல்டு பேரலல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த என்ஜின் 40.9 ஹெச்பி பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் விலை ரூ. 3 லட்சத்து 59 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Spread the love