November 29, 2022

இந்தியாவில் செலுத்தப்பட்ட
கோவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை
219.56 கோடியைக் கடந்தது

புது தில்லி, அக்.25

இந்தியாவில் செலுத்தப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 219.56 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசியை பொறுத்தவரை நேற்று காலை 7 மணி நிலவரப்படி 219.56 கோடிக்கும் அதிகமான (219,56,65,598) டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 12-14 வயதிற்குட்பட்டோருக்கான கோவிட்-19 தடுப்பூசி, 16 மார்ச் 2022 முதல் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, ஏறத்தாழ 4.12 கோடிக்கும் அதிகமான (4,12,36,182) இளம் பருவத்தினருக்கு கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 18-59 வயதுடையவர்களுக்கு கொவிட்-19 முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணி 10 ஏப்ரல் 2022 அன்று தொடங்கியது.

மேலும், இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 22,549 மிகக் குறைவாக உள்ளது. நாட்டின் மொத்த நோய் தொற்று உள்ளவர்கள் தற்போது 0.05 சதவீதமாக உள்ளனர்.

இதை தொடர்ந்து இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.76 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,503 பேர் குணமடைந்துள்ளனர். பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,40,93,409.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 862 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 63,786 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 90.01 கோடி (90,01,49,497) வாராந்திரத் தொற்று 1.02 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 1.35 சதவீதமாக பதிவாகியுள்ளது.

மேலும், தேசிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை 219.56 கோடி (95 கோடி 2-வது தவணை மற்றும் 22.03 கோடி) முன்னெச்சரிக்கை தவணை) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 23,791 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 22,549 கொவிட் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 0.05 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.76 சதம்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 1,503 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,40,93,409 என அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 862 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் (1.35) சதவீதம் ஆகும். வாராந்திர பாதிப்பு விகிதம் (1.02) சதம் ஆகும். இதுவரை மொத்தம் 90.01 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 63,786 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love