October 4, 2022

இந்தியாவில் செலுத்தப்பட்ட
கோவிட் தடுப்பூசி எண்ணிக்கை
213.01 கோடியைக் கடந்தது
மத்திய சுகாதரத்துறை அமைச்சகம் தகவல்

புது தில்லி, செப்.3

இந்தியாவில் செலுத்தப்பட்ட கோவிட் தடுப்பூசி எண்ணிக்கை 213.01 கோடியைக் கடந்துள்ளது என மத்திய சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் கொவிட்-19 தடுப்பூசியை பொறுத்தவரை நேற்று காலை 7 மணி நிலவரப்படி 213.01 கோடிக்கும் அதிகமான (2,13,01,07,236) டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 12-14 வயதிற்குட்பட்டோருக்கான கோவிட்-19 தடுப்பூசி, 16 மார்ச் 2022 முதல் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, ஏறத்தாழ 4.04 கோடிக்கும் அதிகமான (4,04,24,341) இளம் பருவத்தினருக்கு கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 18-59 வயதுடையவர்களுக்கு கொவிட்-19 முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணி 10 ஏப்ரல் 2022 அன்று தொடங்கியது..

இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 56,745 மிகக் குறைவாக உள்ளது. நாட்டின் மொத்த நோய் தொற்று உள்ளவர்கள் தற்போது 0.13 சதவீதமாக உள்ளனர். இதை தொடர்ந்து இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.68 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,651 பேர் குணமடைந்துள்ளனர். பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,38,65,016.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,219 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,64,886 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 88.68 கோடி (88,68,31,141) வாராந்திரத் தொற்று 2.42 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 1.98 சதவீதமாக பதிவாகியுள்ளது.

தேசிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை 213.01 கோடி 94.31 கோடி 2-வது தவணை மற்றும் 16.38 கோடி முன்னெச்சரிக்கை தவணை) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 25,83,815 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 56,745 கொவிட் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 0.13 சதவீதமாக உள்ளது. மேலும், குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.68 சதவீதம்

கடந்த 24 மணி நேரத்தில் 9,651 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,38,65,016 என அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7,219 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் (1.98) சதவீதம் ஆகும். வாராந்திர பாதிப்பு விகிதம் (2.42) சதவீதம் ஆகும். இதுவரை மொத்தம் 88.68 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 3,64,886 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 201.88 கோடிக்கும் மேற்பட்ட (2,01,88,89,325) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 5.73 கோடிக்கும் மேற்பட்ட (5,73,31,800) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Spread the love