October 4, 2022

இந்தியாவில் சினூக் ஹெலிகாப்டர்களில் எந்த பிரச்னையும் இல்லை: போயிங் தகவல்

புது தில்லி, செப்.2

இந்திய விமானப் படை பயன்படுத்தும் சினூக் யஹலிகாப்டர்கள் நல்ல நிலையில் இருப்பதாகவும் எந்த பிரச்னையும் இல்லை என்றும் அதன் தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் இந்திய அதிகாரி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

இந்தியாவில் கடந்த 2019 மார்ச் மாதம் முதல் சினூக் ஹெலிகாப்டர்கள் ராணுவத்தில் முக்கியப் பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவிடம் தற்போது 15 சிஎச்-47 சினூக் ஹெலிகாப்டர்கள் உள்ளன. மேலும், சினூக் ஹெலிகாப்டர்களுக்கு அமெரிக்க ராணுவம் தடை விதித்ததையடுத்து அதைத் தயாரித்த போயிங் நிறுவனத்திடம் இந்திய விமானப்படை விளக்கம் கேட்டுள்ளது.

இந்நிலையில் செய்தி நிறுவனங்களுக்கு போயிங் நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி சலில் குப்தே பேட்டியளித்ததாவது: இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள சினூக் யஹலிகாப்டர்கள் நல்ல நிலையில் உள்ளன. எந்த பிரச்சனையும் இல்லை. மேலும், இந்தியப் படைகளால் இயக்கப்படும் ஹெலிகாப்டரில் இதுவரை எந்தப் பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து அரசு அதிகாரிகள், ‘அமெரிக்க ராணுவத்தின் சினூக் சிஎச்-47 ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டதற்கான காரணங்களை இந்தியா அமெரிக்காவிடம் கேட்டுள்ளது. இந்திய விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டர் இன்னும் செயல்பாட்டில் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Spread the love