October 3, 2022

இந்தியாவில் கூகுள் பிக்சல் போன்களை உற்பத்திய செய்ய முடிவு: சுந்தர் பிச்சை

புது தில்லி, செப்.14

கூகுள் பிக்சல் போன்களை இந்தியாவில் தயாரிக்க கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து இந்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பிக்சல் போன்களின் சில தயாரிப்புகளை இந்தியாவிற்கு மாற்ற கூகுள் பரிசீலித்து வருகிறது. கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட ஊரடங்கு மற்றும் அமெரிக்காவில் அதிகரித்து வரும் பதட்டம், சீனாவில் ஏற்பட்ட இடையூறுகள் ஆகிய காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் 500,000 மற்றும் 1 மில்லியன் பிக்சல் ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதற்காக இந்திய நிறுவனங்களை ஏலத்திற்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கூகுள் பிக்சலின் வருடாந்திர உற்பத்தியில் 10-20 சதவீதத்தை இந்தியாவில் உற்பத்தி செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளது.

கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் பிக்சல் போன்களை உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை பரிசீலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும், இந்திய அரசின் அனுமதி கிடைத்தால் விரைவில் இந்தியாவில் பிக்சல் போன் தயாரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Spread the love