October 2, 2022

இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: ஹர்தீப் சிங் பூரி

The Minister of State for Housing & Urban Affairs, Civil Aviation (Independent Charge) and Commerce & Industry, Shri Hardeep Singh Puri addressing at a Webinar - Swachh Bharat Mission, to celebrate the 6th Anniversary of SBM-Urban, in New Delhi on October 02, 2020.

புது தில்லி, செப்.12

உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்வதில், இந்தியா தனது போர்க்குணத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறினார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதவாது:

உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளின் ஏற்ற இறக்கத்தைக் குறைக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

வளர்ந்த நாடுகளில் எரிபொருள் விலை உயர்வு மிக அதிகமாக இருப்பதை ஒப்பிடுகையில் இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

பிரதமரின் தொலைநோக்கு தலைமையின் கீழ், சுய-சார்பு நடவடிக்கைத் தொடர்பான முதலீட்டை ஊக்குவிக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் கூறினார். பெட்ரோலில் எத்தனாலை 10 சதவீதம் கலப்பது, 2ஜி சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசின் உறுதிப்பாட்டின் அடையாளமாகும் என்றார்.

“இந்தியா எரிசக்தி வாரம் 2023′ என்ற நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் பிராந்திய மற்றும் உலக அளவில் உள்ள முக்கியத் தலைவர்கள் ஒன்றிணைந்து எரிசக்தித் துறையில் வளர்ச்சி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவர் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். “இந்தியா எரிசக்தி வாரம் 2023′ நிகழ்ச்சி தொடர்பாக ஒரு லோகோ வை மத்திய அமைச்சர் வெளியிட்டார்.

Spread the love